< Back
மாநில செய்திகள்
மூதாட்டியிடம் சங்கிலி பறிப்பு
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

மூதாட்டியிடம் சங்கிலி பறிப்பு

தினத்தந்தி
|
7 Nov 2022 12:15 AM IST

கருங்கல் அருகே மூதாட்டியிடம் சங்கிலியை பறித்த மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

கருங்கல்:

கருங்கல் அருகே மூதாட்டியிடம் சங்கிலியை பறித்த மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

கருங்கல் அருகே திப்பிரமலை நெடுவிளை பகுதியைச் சேர்ந்த விஸ்வப்பன் மனைவி லீலாதேவி (வயது 67). இந்தநிலையில் சம்பவத்தன்று லீலாதேவி காலை தனது வீட்டின் பின்புறம் மீன் கழுவிக் கொண்டிருந்தார். அப்போது பின்னால் இருந்து வந்த அடையாளம் தெரியாத நபர் இவரது கழுத்தில் கிடந்த ஒரு பவுன் தங்க சங்கிலி பறித்தார். அதிர்ச்சியடைந்த லீலாதேவி திருடன்.. திருடன்.. என சத்தமிட்டார். உடனே அக்கம் பக்கத்தினர் அங்கு வந்தனர். ஆனால் அதற்குள் மர்ம நபர் மின்னல் வேகத்தில் தப்பி சென்றார். இதுகுறித்து லீலாதேவி கருங்கல் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்