< Back
மாநில செய்திகள்
அரசு கலைக்கல்லூரியில்  முதுகலை படிப்பில் முதலாம் ஆண்டு சேர விண்ணப்பித்தவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு இன்று நடக்கிறது
சிவகங்கை
மாநில செய்திகள்

அரசு கலைக்கல்லூரியில் முதுகலை படிப்பில் முதலாம் ஆண்டு சேர விண்ணப்பித்தவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு இன்று நடக்கிறது

தினத்தந்தி
|
7 Sept 2023 12:45 AM IST

அரசு கலைக்கல்லூரியில் முதுகலை படிப்பில் முதலாம் ஆண்டு சேர விண்ணப்பித்தவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு இன்று நடக்கிறது.


சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி முதல்வர் துரையரசன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:-

சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரியில் அனைத்து முதுநிலை பாடப்பிரிவுகளில் முதலாம் ஆண்டு சேர்வதற்கு இணைய வழியில் விண்ணப்பம் செய்த மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு இன்று(வியாழக்கிழமை) காலை 9 மணி அளவில் நடைபெற உள்ளது. இந்த பணி சம்பந்தப்பட்ட துறைகளில் நடைபெறும் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களுக்கு சேர்க்கைக்கான கலந்தாய்வு நாளை(வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது.

எனவே இணையவழியில் விண்ணப்பித்த அனைத்து மாணவ-மாணவிகளும் உரிய அனைத்து அசல் சான்றிதழ்கள் மற்றும் அவற்றின் இரண்டு நகல்களை கொண்டு வர வேண்டும். சேர்க்கை கட்டணமாக எம்.ஏ. படிப்பிற்கு ரூ.1000, எம்.எஸ்.சி. படிப்பிற்கு ரூ.1020-ம், எம்.எஸ்.சி. கணினி அறிவியல் படிப்பிற்கு ரூ.1520 செலுத்த வேண்டும். அழகப்பா பல்கலைக்கழகம் தவிர பிற பல்கலைக்கழக இணைப்பு கல்லூரிகளில் படித்த மாணவர்கள் கூடுதல் கட்டணமாக ரூ.200 சேர்த்து செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்