< Back
மாநில செய்திகள்
சிவகங்கை
மாநில செய்திகள்
ஒரே நேரத்தில் ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா
|19 Aug 2023 12:15 AM IST
ஒரே நேரத்தில் ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா
சிவகங்கை மாவட்டம் இலுப்பகுடி கிராமத்தில் இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படை பயிற்சி மையம் கடந்த 2011-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது இந்த ஆண்டுக்குள் 18 ஆயிரம் மரக்கன்று நடுவதற்கு திட்டமிட்டு உள்ளனர். இதில் முதல் கட்டமாக சில நாட்கள் முன்பு 5 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டனர். நேற்று இரண்டாவது கட்டமாக ஒரே நேரத்தில் 400 இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் கிளாதிரி கிராமத்தில் பசுமை ஏற்படுவதற்குக்கும் சுற்றுச்சூழல் மாசு ஏற்படாமல் இருப்பதற்கும் கமாண்டன்ட் சுரேஷ் குமார் தலைமையில் வீரர்கள் 1000 மரக்கன்றுகளை நட்டனர். இதில் மா, கொய்யா, வேம்பு, சந்தனம் ஆகிய மரக்கன்றுகள் நடப்பட்டன.