< Back
மாநில செய்திகள்
மத்திய அரசு ரூ.1,000 கோடி நிதி ஒதுக்க வேண்டும்
விருதுநகர்
மாநில செய்திகள்

மத்திய அரசு ரூ.1,000 கோடி நிதி ஒதுக்க வேண்டும்

தினத்தந்தி
|
21 Feb 2023 12:29 AM IST

சிவகாசி மாநகராட்சியில் செய்ய வேண்டிய வளர்ச்சி பணிகளுக்கு மத்திய அரசு ரூ.1,000 கோடி நிதி ஒதுக்க வேண்டும் என்று மாணிக்கம் தாகூர் எம்.பி. வலியுறுத்தி உள்ளார்.

சிவகாசி,

சிவகாசி மாநகராட்சியில் செய்ய வேண்டிய வளர்ச்சி பணிகளுக்கு மத்திய அரசு ரூ.1,000 கோடி நிதி ஒதுக்க வேண்டும் என்று மாணிக்கம் தாகூர் எம்.பி. வலியுறுத்தி உள்ளார்.

குடிநீர் நிலையம்

விருதுநகர் எம்.பி. மாணிக்கம்தாகூர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கட்டப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையத்தின் திறப்பு விழா நேற்று காலை சிவகாசி அம்மன்கோவில்பட்டியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மாணிக்கம்தாகூர் எம்.பி. குடிநீர் நிலையத்தை திறந்து வைத்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சிவகாசி மாநகராட்சி வளர்ச்சிக்கு மத்திய அரசு இதுவரை எந்த நிதியும் ஒதுக்கவில்லை. ரூ.1,000 கோடி ஒதுக்கினால் மட்டுமே அடிப்படை வசதிகள் சிவகாசியில் ஏற்படுத்த முடியும். இதுகுறித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுத உள்ளேன். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும். மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அதற்கு அவருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

பட்டாசு தொழில்

சிவகாசி வெடிப்பொருள் கட்டுப்பாட்டுத்துறையில் காலியாக உள்ள பதவிகளுக்கு தேவையான அதிகாரிகளை நியமிக்க வேண்டும். பட்டாசு தொழில் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். தி.மு.க. நல்லாட்சிக்கு சான்றாக ஈரோடு கிழக்கு தொகுதி வெற்றி அமையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் மேயர் சங்கீதா இன்பம், துணை மேயர் விக்னேஷ்பிரியா காளிராஜன், கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி, மண்டல தலைவர் சேவுகன், கவுன்சிலர்கள் ராஜேஷ், ரவிசங்கர், பாக்கியலட்சுமி, காங்கிரஸ் நிர்வாகிகள் சேர்மத்துரை, மீனாட்சிசுந்தரம், பைபாஸ் வைரகுமார், முன்னாள் கவுன்சிலர் கணேசன், முத்துமணி உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக அம்மன்கோவில் மாநகராட்சி பள்ளியில் ஆய்வு செய்த மாணிக்கம்தாகூர் எம்.பி. அந்த பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகள் அமர உரிய மேசை, நாற்காலிகள் வாங்கி தருவதாக உறுதி அளித்தார்.

Related Tags :
மேலும் செய்திகள்