< Back
மாநில செய்திகள்
தமிழ்நாடு அரசு கேட்கும் நிதியை மத்திய அரசு கொடுப்பதில்லை - எடப்பாடி பழனிசாமி
மாநில செய்திகள்

தமிழ்நாடு அரசு கேட்கும் நிதியை மத்திய அரசு கொடுப்பதில்லை - எடப்பாடி பழனிசாமி

தினத்தந்தி
|
27 April 2024 12:04 PM IST

எப்போதும் கேட்கப்படும் நிதியை விட குறைந்த அளவு நிதியையே மத்திய அரசு அளிக்கும் என்றுஎடப்பாடி கே.பழனிசாமி கூறியுள்ளார்.

சேலம்,

சேலத்தில் அ.தி.மு.க. சார்பில் 4 இடங்களில் நீர், மோர் பந்தலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி கே.பழனிசாமி கூறியதாவது:-

"தமிழ்நாடு அரசு கேட்கும் நிதியை மத்திய அரசு கொடுப்பதில்லை. எப்போதும் கேட்கப்படும் நிதியை விட குறைந்த அளவு நிதியையே மத்திய அரசு அளிக்கும். அ.தி.மு.க. ஆட்சியிலும் மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை. மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆண்டபோதும் நிதியை குறைத்து தான் வழங்கினார்கள். தி.மு.க. மத்தியில் அதிகாரத்தில் இருந்தபோது கூட கேட்ட நிவாரணம் கிடைக்கவில்லை.

குடிமராமத்து திட்டம் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தி.மு.க. ஆட்சியில் நிறுத்தப்பட்டது. அ.தி.மு.க ஆட்சியில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இருந்த 14 ஆயிரம் ஏரிகளில் 6 ஆயிரம் ஏரிகள் தூர்வாரப்பட்டன. தமிழகத்தில் போதைப்பொருளால் சமுதாயம் மிக மோசமான அழிவுக்கு சென்று கொண்டிருக்கிறது. போதைப்பொருள் விவகாரத்தில் இரும்புக்கரம் கொண்டு அடக்காமல் அரசு அலட்சியம் காட்டி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்