புதுக்கோட்டை
மேற்கூரை சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுந்தது
|மேற்கூரை சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுந்தது.
புதுக்கோட்டை புதிய பஸ் நிலைய கட்டிடம் பழமையானதாகும். பஸ் நிலைய கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக நிதி ஒதுக்கி பணிகள் தொடங்கப்பட உள்ளது. மேலும் புதிய பஸ் நிலைய வளாகத்தில் உள்ள கடைகளை காலி செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கட்டிடம் சேதமடைந்து காணப்படுவதால் மேற்கூரையில் கான்கிரீட்டில் சிமெண்டு பூச்சுகள் அவ்வப்போது பெயர்ந்து விழுவது வழக்கம். இந்த நிலையில் புதுக்கோட்டையில் நேற்று மாலைக்கு மேல் மழை பெய்தது. தொடர்ந்து மழை தூறியபடி இருந்தது. இந்த நிலையில் புதிய பஸ் நிலையத்தில் இன்று இரவு அறந்தாங்கி வழித்தடத்தில் இயக்கப்படும் பஸ்கள் நிறுத்தும் இடத்தில் உள்ள கடைகளின் முன்பகுதியில் உள்ள மேற்கூரையில் சிமெண்டு பூச்சு சிறிதளவு பெயர்ந்து விழுந்தது. அந்த நேரத்தில் அவ்விடத்தில் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும் நகராட்சி அதிகாரிகள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் கடைகளை விரைவில் காலி செய்து கொடுத்தால் அடுத்ததாக புதிய கட்டிட பணியை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்து சென்றனர்.