< Back
மாநில செய்திகள்
ஆலங்காயம் வட்டார மருத்துவமனையில் இணை இயக்குனர் ஆய்வு
திருப்பத்தூர்
மாநில செய்திகள்

ஆலங்காயம் வட்டார மருத்துவமனையில் இணை இயக்குனர் ஆய்வு

தினத்தந்தி
|
22 Jun 2023 5:18 PM IST

ஆலங்காயம் வட்டார மருத்துவமனையில் இணை இயக்குனர் ஆய்வு மேற்கொண்டார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அரசு வட்டார மருத்துவமனையில் இணை இயக்குனர் சம்பத் திடீரென ஆய்வு செய்தார். அப்போது புறநோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை, கர்ப்பிணிகளுக்கு அளிக்கப்படும் மருத்துவ பரிசோதனைகள், ஆய்வகங்கள் மற்றும் பதிவேடுகளை பார்வையிட்டார். மேலும் அருகில் உள்ள பள்ளியில் நடக்கும் மருத்துவ முகாமில் மாணவர்களுக்கு ஹீமோகுளோபின், கண் மற்றும் பல் சிகிச்சை போன்ற மருத்துவ பரிசோதனைகளை பார்வையிட்டார்.

ஆய்வின்போது துணை இயக்குனர் (சுகாதார பணிகள்) டி.ஆர்.செந்தில்குமார், வட்டார மருத்துவ அலுவலர் ச.பசுபதி மற்றும் அனைத்து சுகாதார பணியாளர்கள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்