பழிவாங்கும் எண்ணத்தில் வழக்கை விசாரிக்கக் கூடாது -ஆர்.எஸ்.பாரதி பேட்டி
|அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்
சென்னை,
அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
திமுக அமைச்சர்கள் மீதான முடிக்கப்பட்ட வழக்குகளை தாமாக முன் வந்து விசாரிப்பதாக சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.. வழக்கை தாமாக முன்வந்து விசாரிக்க உரிமை இருந்தாலும், பழிவாங்கும் எண்ணத்தில் வழக்கை விசாரிக்கக் கூடாது.
திமுக அமைச்சர்கள் மீதான வழக்குகளை மீண்டும் விசாரிப்பது ஏன்? உச்சநீதிமன்றத்தில் வாதாடி இறுதி வெற்றியை பெறுவோம். நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு அளவு கடந்த நம்பிக்கையும், மரியாதை உள்ளது. நீதிமன்றத்தின் வாயிலாக பல வெற்றிகளை திமுக பெற்றுள்ளது
மக்கள் மத்தியில் திமுக மீது களங்கம் ஏற்பட கூடாது என்பதற்காகவே இந்த விளக்கம் தருகிறோம். பொதுமக்கள் மத்தியில் தவறான எண்ணம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அதிமுக மாநாட்டை விட, அமைச்சர் உதயநிதி தவறாக ஏதும் பேசவில்லை.இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.