< Back
மாநில செய்திகள்
கல்லூரி மாணவியை ஏமாற்றிய வாலிபர் மீது வழக்கு
விழுப்புரம்
மாநில செய்திகள்

கல்லூரி மாணவியை ஏமாற்றிய வாலிபர் மீது வழக்கு

தினத்தந்தி
|
23 May 2022 11:12 PM IST

திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி கல்லூரி மாணவியை ஏமாற்றிய வாலிபர் மீது வழக்கு

விழுப்புரம்

செஞ்சி தாலுகா பழவளம் கிராமத்தை சேர்ந்த 21 வயதுடைய மாணவி திருவண்ணாமலையில் உள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியில் பி.எஸ்சி. வேதியியல் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். அதே கிராமத்தை சேர்ந்த தர்மசீலன் மகன் ராமதாஸ்(29) என்பவர் டிப்ளமோ வரை படித்து விட்டு நெல் அறுவடை எந்திரம் ஓட்டி வருகிறார். இவர், அந்த மாணவியிடம் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி உல்லாசம் அனுபவித்து வந்ததாக கூறப்படுகிறது. தற்போது அந்த மாணவி, ராமதாசிடம் சென்று தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி கேட்டதற்கு அவர் திருமணம் செய்ய மறுத்துவிட்டார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி, விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் ராமதாஸ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்