< Back
மாநில செய்திகள்
ஏலச்சீட்டு நடத்தி ரூ.6½ லட்சம் மோசடி; மரதச்சு தொழிலாளி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார்
பெரம்பலூர்
மாநில செய்திகள்

ஏலச்சீட்டு நடத்தி ரூ.6½ லட்சம் மோசடி; மரதச்சு தொழிலாளி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார்

தினத்தந்தி
|
22 May 2022 6:31 PM GMT

ஏலச்சீட்டு நடத்தி ரூ.6½ லட்சம் மோசடி செய்ததாக மரதச்சு தொழிலாளி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தார்.

கடலூர் மாவட்டம், திட்டக்குடி தாலுகா, தச்சூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பழனிவேல் (வயது 44). இவர் பெரம்பலூர் நான்கு ரோடு பகுதியில் மரதச்சு தொழில் செய்து வருகிறார். இந்தநிலையில் இவர் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், குன்னம் தாலுகா திருமாந்துறை பகுதியில் நடத்தப்பட்ட 3 வகையான ஏலச்சீட்டில் மொத்தம் ரூ.6 லட்சத்து 63 ஆயிரத்து 300 கட்டியிருந்தேன். ஆனால் தற்போது ஏலச்சீட்டு நடத்தியவர்கள் கட்டிய பணத்தை கூட திரும்ப தராமல் இழுத்தடித்து வருகின்றனர். இந்த பணத்தை திரும்ப பெற்று தரக்கோரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தும் தற்போது சரிவர நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே ஏலச்சீட்டு நடத்தி என்னை நம்ப வைத்து மோசடியில் ஈடுபட்ட மீனா, பூமாலை, சந்தியா, சுரேஷ், பானுமதி, சந்தோஷ் ஆகிய 6 பேர் மீது நடவடிக்கை எடுத்து, அவர்களிடம் இருந்து பணத்தை திரும்ப பெற்ற தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

மேலும் செய்திகள்