< Back
மாநில செய்திகள்
வியாபாரி மீது மோதிய கார்
அரியலூர்
மாநில செய்திகள்

வியாபாரி மீது மோதிய கார்

தினத்தந்தி
|
21 Oct 2023 1:54 AM IST

வியாபாரி மீது கார் மோதியது.

உடையார்பாளையம்:

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே நாகல்குழி கிராமத்தை சேர்ந்தவர் சாமிதுரை (வயது 75). வியாபாரி. இவர் நேற்று திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது பிரபாகரன் (26) என்பவர் ஓட்டி வந்த கார் சாமிதுரை மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சாமிதுரை ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்