< Back
மாநில செய்திகள்
சாலை தடுப்பில் கார் மோதி கவிழ்ந்தது; 7 பேர் காயம்
திருச்சி
மாநில செய்திகள்

சாலை தடுப்பில் கார் மோதி கவிழ்ந்தது; 7 பேர் காயம்

தினத்தந்தி
|
26 May 2023 1:54 AM IST

சாலை தடுப்பில் கார் மோதி கவிழ்ந்ததில் 7 பேர் காயமடைந்தனர்.

வையம்பட்டி:

சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்தவர் பிரபாகரன்(வயது 35). இவர் தனது குடும்பத்தினர் 5 பேருடன் ஒரு காரில் தேனிக்கு சென்று கொண்டிருந்தார். காரை சுரேஷ் என்பவர் ஓட்டினார். திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் வையம்பட்டியை அடுத்த கீரனூர் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் தடுப்புச்சுவரில் மோதி சாலையோரத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 7 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வையம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்