கன்னியாகுமரி
வாக்குவாதத்தில் ஈடுபட்ட கார் டிரைவர் மயங்கி விழுந்து சாவு
|வாக்குவாதத்தில் ஈடுபட்ட கார் டிரைவர் மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தார்.
தக்கலை:
வாக்குவாதத்தில் ஈடுபட்ட கார் டிரைவர் மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தார்.
கன்னியாகுமரி அருகே உள்ள சாமிநாதபுரத்தை சேர்ந்தவர் சண்முகராஜா (வயது 43), இவர் கன்னியாகுமரியை சோ்ந்த ஒரு தனியார் டிராவல் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில், சண்முகராஜா நேற்று முன்தினம் மதியம் 1 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து காரில் சுற்றுலா பயணிகளை ஏற்றிகொண்டு பத்மநாபபுரம் அரண்மனைக்கு சென்றார். பயணிகளை அங்கு இறக்கிவிட்டுவிட்டு காரில் இருந்து இறங்கி சாலையோரம் நின்றுகொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதில் வாகன டிரைவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதை பார்த்து கொண்டிருந்த சண்முகராஜா சமாதானம் செய்துள்ளார். அப்போது தக்கலை பிரம்மபுரத்தை சோ்ந்த ஒருவர் சண்முகராஜாவுடன் தகராறு செய்துள்ளார். இதில் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் திடீரென சண்முகராஜா மயங்கி கீழே விழுந்தார். உடனே அப்பகுதியில் நின்றவர்கள் அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சண்முகராஜாவின் மகன் மோகன் (21) தக்கலை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.