< Back
மாநில செய்திகள்
ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் வைத்திருந்த ரூ.50 லட்சம் பணத்துடன் தப்பிச் சென்ற கார் ஓட்டுநர்
மாநில செய்திகள்

ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் வைத்திருந்த ரூ.50 லட்சம் பணத்துடன் தப்பிச் சென்ற கார் ஓட்டுநர்

தினத்தந்தி
|
4 Sept 2022 11:44 AM IST

ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் வைத்திருந்த ரூ.50 லட்சம் பணத்துடன் கார் ஓட்டுநர் தப்பிச் சென்றாக தகவல் வெளியாகி உள்ளது.

தேனி,

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரின் 50 லட்சம் ரூபாய் பணத்துடன் தப்பிச் சென்ற கார் ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர். முன்னதாக ஒ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளரான நாராயணன் என்பவரின் கார் ஒட்டுநராக ஸ்ரீதர் பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில், நாராயணன் 50 லட்சம் ரூபாயுடன் காரில் சென்றுள்ளார். காரை விட்டு இறங்கிய அவர், ஒட்டுநர் ஸ்ரீதரிடம் காரில் உள்ள பணத்தை தனது வீட்டில் ஒப்படைக்குமாறு கூறிஉள்ளார். ஆனால், 50 லட்சம் ரூபாய் பணத்துடன் ஸ்ரீதர் தப்பிச்சென்றதாக தெரிகிறது. இதுகுறித்து நாராயணன் அளித்த புகாரின் பேரில், போலீசார் ஸ்ரீதரை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்