< Back
மாநில செய்திகள்
செங்கல்பட்டு
மாநில செய்திகள்
பரனூர் சுங்கச்சாவடி அருகே வழிகாட்டி பெயர் பலகையில் மோதி நின்ற கார்
|20 April 2023 2:13 PM IST
பரனூர் சுங்கச்சாவடி அருகே வழிகாட்டி பெயர் பலகையில் மோதி நின்ற காரிலிருந்த அனைவரும் சீட் பெல்ட் அணிந்திருந்ததால் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்.
திருச்சியில் உள்ள கோவில் திருவிழாவில் கலந்து கொண்ட சிறுவன், சிறுமி உள்ளிட்ட 5 பேர் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தனர். அந்த கார் செங்கல்பட்டு அடுத்த புலிப்பாக்கம் அருகே வந்த போது சிமெண்டு தயாரிப்புக்கு மூல பொருட்களை ஏற்றிக்கொண்டு வந்த லாரி காரின் பின்னால் மோதியது. இதில் அந்த கார் பாய்ந்து வந்து சாலையின் நடுவில் உள்ள வழிக்காட்டி பெயர் பலகையில் மோதி நின்றது.
வழிக்காட்டி பெயர் பலகை மட்டும் அங்கு இல்லாமல் இருந்திருந்தால் பெரும் விபத்து ஏற்பட்டிருக்க கூடும். காரில் பயணம் செய்த அனைவரும் சீட் பெல்ட் அணிந்து வந்ததால் அதிஷ்டவசமாக அனைவரும் காயமின்றி உயிர் தப்பினார்கள். விபத்து காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.