< Back
மாநில செய்திகள்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்
கார் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு
|27 Oct 2023 1:57 AM IST
புதுக்கோட்டை அருகே கார் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை பாண்டியன் நகரை சேர்ந்தவர் சண்முகம் (வயது 45). இவர் திருச்சி-காரைக்குடி சாலையில் அன்னவாசல் அருகே உள்ள சிப்காட் பகுதியில் நேற்று காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கார் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக காரில் இருந்த சண்முகம் கீழே இறங்கி உயிர் தப்பினார். ேமலும் அப்பகுதியில் கடும் புகை மூட்டம் நிலவியது. இதுகுறித்து தகவல் அறிந்த சிப்காட் தீயணைப்பு நிலைய அலுவலர் அப்துல்ரகுமான் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். இருப்பினும் அந்த கார் முற்றிலும் எரிந்து நாசமானது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.