< Back
மாநில செய்திகள்
திருப்பத்தூர்
மாநில செய்திகள்
கால்வாயை தூர்வார வேண்டும்
|18 Jun 2023 11:01 PM IST
கால்வாயை தூர்வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் ஒன்றியம் கைலாசகிரி ஊராட்சி 8-வது வார்டில் புதிதாக கட்டப்பட்ட கால்வாயில் கழிவுநீர், குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுப்பொருட்கள் கிடக்கிறது. இதனால் கழிவுநீர் ஓடவில்லை. கால்வாயை தூர்வார வேண்டும் என பல முறை கோரிக்கை விடுத்தும் வார்டு கவுன்சிலரோ, ஊராட்சி நிர்வாகமோ நடவடிக்கை எடுக்கவில்லை. கழிவுநீர் கால்வாயை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உயர் அதிகாரிகள் உத்தரவிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.