< Back
மாநில செய்திகள்
வயலில் இறங்கிய பஸ்; பயணிகள் உயிர் தப்பினர்
திருச்சி
மாநில செய்திகள்

வயலில் இறங்கிய பஸ்; பயணிகள் உயிர் தப்பினர்

தினத்தந்தி
|
13 Oct 2023 2:24 AM IST

வயலில் பஸ் இறங்கியதால் பயணிகள் உயிர் தப்பினர்.

உப்பிலியபுரம்:

உப்பிலியபுரத்தில் இருந்து தா.பேட்டைக்கு நேற்று மாலை ஒரு தனியார் பஸ் சென்றது. அந்த பஸ்சை டிரைவர் கட்டப்பள்ளியை சேர்ந்த பாஸ்கர்(வயது 36) ஓட்டினார். வைரிசெட்டிப்பாளையத்தில் இருந்து வளையப்பட்டி செல்லும் வழியில் சென்றபோது, எதிரே வந்த வாகனத்திற்கு வழிவிடுவதற்காக டிரைவர் பஸ்சை திருப்பினார். அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலையோரம் இருந்த நெல் வயலுக்குள் இறங்கி சாய்ந்த நிலையில் நின்றது. இதனால் பயணிகள் அலறியடித்தபடி பஸ்சில் இருந்து கீழே இறங்கி ஓடினர். இதையடுத்து அங்கு பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு பஸ் மீட்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்