< Back
மாநில செய்திகள்
குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும்
மயிலாடுதுறை
மாநில செய்திகள்

குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும்

தினத்தந்தி
|
18 Jan 2023 12:15 AM IST

கொள்ளிடம் அருகே குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

கொள்ளிடம்:

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள வடரங்கம் கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றங்கரை சாலை உள்ளது. இந்த சாலை வழியாக பாலூரன்படுகை, மாதிரவேளூர், கொன்னக்காட்டுபடுகை, கீரங்குடி, சரஸ்வதிவிளாகம், சந்தப்படுகை, திட்டுபடுகை, முதலைமேடு, அளக்குடி, மகேந்திரப்பள்ளி வழியாக காட்டூர் செல்கிறது. இந்த சாைலயை கொள்ளிடம் ஆற்றின் கரையோரத்தில் உள்ள சுமார் 40-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது இந்த சாலை சேதமடைந்து காணப்படுகிறது. சாலையில் ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மழை காலங்களில் சாலையில் உள்ள பள்ளத்தில் தண்ணீர் தேங்கி கிடக்கிறது. இந்த சாலையில் வாகனங்களில் வருபவர்கள் பள்ளம் இருப்பது தெரியாமல் தடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர்.இதுகுறித்து கிராம மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கைஎனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கொள்ளிடம் ஆற்றங்கரை சாலையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்