< Back
மாநில செய்திகள்
குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும்

தினத்தந்தி
|
16 Oct 2023 2:29 AM IST

திருச்சிற்றம்பலம் அருகே குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருச்சிற்றம்பலம்:

பிரதான சாலை

திருச்சிற்றம்பலம் அருகில் உள்ள தெற்கு பொக்கன் விடுதி வழியாக கல்லணை கால்வாயின் புதுப்பட்டினம் 2-ம் நம்பர் கிளை வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்கால் கரையில் உள்ள சாலையானது களத்தூர், திருப்பூரணக்காடு, கொன்றைக்காடு வரை சென்று பேராவூரணிக்கு செல்லும் பிரதான சாலையுடன் இணைகிறது.

இந்த சாலையில் பல்வேறு கிராம மக்கள் வாகனங்களில் சென்று வருகின்றனர். பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.

குண்டும், குழியுமாக...

பொக்கன்விடுதி தெற்கு கிராமத்தில் இருந்து களத்தூர் ஆற்று பாலம் வரை இந்த சாலையானது, ஜல்லிகற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது.

இதனால் இந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் இரவில் இந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் ெபயர்ந்து கிடக்கும் ஜல்லி கற்களால் தடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர்.

சீரமைக்க வேண்டும்

சாலையில் பெயர்ந்து கிடக்கும் ஜல்லி கற்களால் சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிள் டயர் பஞ்சராகி விடுகிறது.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், பொக்கன் விடுதி தெற்கு கிராமத்தில் இருந்து களத்தூர் ஆற்றுப் பாலம் வரை உள்ள குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்