< Back
மாநில செய்திகள்
மேடைக்குள் புகுந்த காளை.. தெறித்து ஓடிய விழா கமிட்டியாளர்கள்: மஞ்சுவிரட்டு போட்டியில் பரபரப்பு
மாநில செய்திகள்

மேடைக்குள் புகுந்த காளை.. தெறித்து ஓடிய விழா கமிட்டியாளர்கள்: மஞ்சுவிரட்டு போட்டியில் பரபரப்பு

தினத்தந்தி
|
5 May 2024 4:06 PM IST

சீறிக்கொண்டிருந்த காளை, திடீரென மேடைக்குள் புகுந்ததால் விழா கமிட்டியாளர்கள் தெறித்து ஓடினர்

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டம் தாணிச்சாவூரணி கிராமத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி என்பது மைதானத்தின் நடுவில் கயிறால் கட்டப்பட்டிருக்கும் காளையை 9 பேர் கொண்ட மாடுவிடி வீரர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் பிடிக்க வேண்டும். வெற்றிபெறும் காளை மற்றும் மாடுபிடி வீரர்களை விழா கமிட்டியாளர்கள் அறிவிப்பார்கள்.

இவ்வாறு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டு இருந்தது. அப்போது காளை ஒன்றின் கழுத்தில் கட்டப்பட்டு இருந்த கயிறு திடீரென கழன்றது. ஏற்கெனவே ஆக்ரோஷமாக சீறிக்கொண்டிருந்த காளை, கயிற்றில் இருந்து விடுபட்டதால், அங்கும் இங்குமாக ஓடியது. தொடர்ந்து, எதிர்பாராதவிதமாக விழா கமிட்டியாளர்கள் அமர்ந்திருந்த மேடை மீது காளை புகுந்தது.

இதனால் மேடையில் அமர்ந்திருந்த விழா கமிட்டியாளர்கள், உயிர் பிழைத்தால் போதும் என எண்ணியவாறு மேடையை விட்டு தெறித்து ஓடினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்புடன் காணப்பட்டது.

மேலும் செய்திகள்