< Back
மாநில செய்திகள்
புகழூர் நகராட்சி குப்பை கிடங்கு திடீரென தீப்பிடித்து எரிந்தது
கரூர்
மாநில செய்திகள்

புகழூர் நகராட்சி குப்பை கிடங்கு திடீரென தீப்பிடித்து எரிந்தது

தினத்தந்தி
|
6 Jun 2022 11:59 PM IST

புகழூர் நகராட்சி குப்பை கிடங்கு திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை போராடி அணைத்தனர்.

நொய்யல்,

குப்பை கிடங்கில் தீ

கரூர் மாவட்டம் புகழூர் நகராட்சியில் உள்ள வார்டுகளில் சேகரிக்கப்படும் பல்வேறு வகையான குப்பைகளை துப்புரவு பணியாளர்கள் மூலம் நகராட்சி வாகனத்தின் மூலம் எடுத்துச் சென்று கந்தசாமிபாளையம் பகுதியில் உள்ள புகழூர் நகராட்சி குப்பை கிடங்கில் தினசரி கொட்டி வருகின்றனர். இதனால் அங்கு ஏராளமான குப்பைகள் குவிந்து கிடக்கின்றன.இந்நிலையில் குப்பை கிடங்கில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனால் அந்த பகுதி புகைமண்டலமாக காட்சியளித்தது. இதைக்கண்ட அக்கம், பக்கத்தினர் நகராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

போராடி அணைத்தனர்

தகவலின்பேரில் நகராட்சித் தலைவர் சேகர் என்கிற குணசேகரன் மற்றும் ஊழியர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். மேலும் இதுகுறித்து வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் குப்பை கிடங்கில் எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீரை கொண்டு பீய்ச்சி அடித்து போராடி அணைத்தனர். மேலும் தீ அருகிலுள்ள பகுதிகளுக்கு பரவாமல் தடுத்தனர். இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது.

மேலும் செய்திகள்