தஞ்சாவூர்
பாலத்தை இடிக்க வேண்டும்
|சேதுபாவாசத்திரம் அருகே சேதமடைந்த பாலத்தை இடிக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேதுபாவாசத்திரம் அருகே சேதமடைந்த பாலத்தை இடிக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிவன்கோவில்
சேதுபாவாசத்திரம் அருகில் உள்ள மருங்கப்பள்ளத்தில் புகழ்பெற்ற ஒளஷதபுரீஸ்வரர் கோவில் உள்ளது. தஞ்சையை ஆண்ட 2-ம் சரபோஜி மன்னரால் கட்டப்பட்ட இந்த சிவாலயத்திற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து தினமும் பக்தர்கள் வந்து செல்வார்கள். பேராவூரணியிலிருந்து சேதுபாவாசத்திரம் செல்லும் வழியில் மருங்கப்பள்ளம் சிவன் கோவில் சாலையில் கல்லணை கால்வாய் நாடியம் கோட்டக்குளம் செல்லும் நாடாகாடு கிளை வாய்க்காலின் குறுக்கே பல ஆண்டுகளுக்கு முன்பு பாலம் கட்டப்பட்டது.
தடுப்பு சுவர் இல்லாத பாலம்
தற்போது இந்த பாலம் சேதமடைந்துள்ளது. மேலும் தடுப்பு சுவர்கள் இல்லாமல் காணப்படுகிறது. இந்த பாலத்தின் வழியாக சிவன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் பல்வேறு வாகனங்களில் அதிகமாக செல்கின்றனர். இதனால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இந்த பாலம் வழியாக செல்லும் போது வாகன ஓட்டிகள் ஆற்றில் விழுந்து காயமடையும் நிலை உள்ளது. எனவே விபத்து ஏற்படும் முன்பு
தடுப்பு சுவர் இல்லாத, சேதமடைந்த பாலத்தை இடித்துவிட்டு அதே இடத்தில் புதிய பாலம் கட்டித்தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.