< Back
மாநில செய்திகள்
விழுப்புரம்
மாநில செய்திகள்
விழுப்புரம் கைலாசநாதர் கோவிலில் பிரம்மோற்சவ விழா
|28 April 2023 12:15 AM IST
விழுப்புரம் கைலாசநாதர் கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழுப்புரம் திரு.வி.க. வீதியில் பிரஹன்நாயகி சமேத கைலாசநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் 12 நாட்கள் பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெறும். அதுபோல் இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி கொடிமரத்துக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு கொடியேற்றி வைக்கப்பட்டது. இதில் பக்தர்கள் பலர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, ஒவ்வொரு நாள் காலையும் பல்லக்கு உற்சவமும், இரவு சூரியபிரபை, நாக வாகனம், ரிஷபவாகனம், யானை வாகனம், குதிரை வாகனங்களில் சாமி வீதியுலாவும் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக மே மாதம் 5-ந் தேதி காலை தேரோட்டம் நடைபெறுகிறது.
இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.