< Back
மாநில செய்திகள்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்
வரதராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா
|22 May 2022 12:27 AM IST
வரதராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழாவையொட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை) பெரிய வரதன் புறப்பாடு நடைபெறுகிறது.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை கீழ 3-ம் வீதியில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சாமி சிறப்பு அலங்காரத்தில் வெவ்வேறு வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை அளித்து வருகிறார். நேற்று சப்பர தேர்த்திருவிழா நடைபெற்றது. தொடர்ந்து மாலையில் சிறப்பு அலங்காரத்தில் வரதராஜ பெருமாள் பக்தா்களுக்கு சேவை அளித்தார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணிக்கு பெரிய வரதன் புறப்பாடு நடைபெறுகிறது. நாளை (திங்கட்கிழமை) மாலை 6 மணிக்கு ஊஞ்சல் சேவையுடன் விழா நிறைவடைகிறது.