< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
பஸ் ஸ்டாண்டில் காதலி பேசாத ஆத்திரத்தில் பஸ் கண்ணாடியை உடைத்த காதலன்..!
|4 March 2023 11:11 AM IST
குமரியில், காதலி பேசாத ஆத்திரத்தில், அரசுப் பேருந்து கண்ணாடியை கையால் உடைத்த மாணவரால் பரபரப்பு ஏற்பட்டது
குமரி,
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், காதலி பேசாத ஆத்திரத்தில், அரசுப் பேருந்து கண்ணாடியை கையால் உடைத்த மாணவரால் பரபரப்பு ஏற்பட்டது.
நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் நின்றிருந்த இளைஞர் ஒருவர், திடீரென, அரசுப் பேருந்தின் கண்ணாடியை கையால் உடைத்தார். இதில், கண்ணாடி உடைந்ததுடன் இளைஞரின் கையில் காயம் ஏற்பட்டு ரத்தம் வெளியேறியது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், சுசீந்திரம் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும், நாகர்கோவிலில் உள்ள தொழில் பயிற்சி நிலையத்தில் படித்து வருவதும் தெரியவந்தது.
மேலும், காதலி பேசாத ஆத்திரத்தில் பேருந்து கண்ணாடியை உடைத்ததாக, கூறினார். இது தொடர்பாக, போக்குவரத்து கழகம் அளித்த புகாரின் கீழ், கோட்டாறு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.