< Back
மாநில செய்திகள்
விழுப்புரம்
மாநில செய்திகள்
கஞ்சா விற்ற சிறுவன் சிக்கினான்
|26 Sept 2023 1:10 AM IST
கஞ்சா விற்ற சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் சாலாமேடு சின்னப்பா நகர் பகுதியில் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனை செய்துகொண்டிருந்த விழுப்புரம் கே.கே.சாலை அண்ணா நகரை சேர்ந்த 16 வயதுடைய சிறுவனை போலீசார் கைது செய்து அவனிடமிருந்த 10 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.