< Back
மாநில செய்திகள்
சிறுமியை திருமணம் செய்த வாலிபர் சிக்கினார்
தேனி
மாநில செய்திகள்

சிறுமியை திருமணம் செய்த வாலிபர் சிக்கினார்

தினத்தந்தி
|
21 Oct 2023 4:15 AM IST

போடியில் சிறுமியை திருமணம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

போடி சுப்புராஜ் நகர் சந்தன மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சூர்யா (வயது 25). இவர் கடந்த 18-ந்தேதி 14 வயது சிறுமியை திருமணம் செய்தார். இது குறித்து மாவட்ட சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் பூபதி போடி அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சூர்யா, அவரது தந்தை போதுராஜா, தாய் கலையரசி, அக்காள் காயத்ரி, சிறுமியின் உறவினர்கள் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் சூர்யாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்