கோயம்புத்தூர்
மாணவியை கர்ப்பிணியாக்கிய சிறுவன் போக்சோவில் கைது
|பொள்ளாச்சி அருகே மாணவியை கர்ப்பிணியாக்கிய சிறுவனை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி அருகே மாணவியை கர்ப்பிணியாக்கிய சிறுவனை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
சிறுமி கர்ப்பம்
பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் பகுதியை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் ஒரு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் அந்த மாணவி தனது வீட்டில் வயிறு வலிப்பதாக கூறி வந்தார். மேலும் அதற்கு சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதையடுத்து அந்த சிறுமியை பொள்ளாச்சியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு பெற்றோர் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து வந்தனர்.
சிறுமியை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் 5 மாத கர்ப்பிணியாக இருப்பதாக கூறினர். இதுகுறித்து சிறுமியிடம் பெற்றோர் கேட்டனர். அப்போது சிறுமி, அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறினார். இதுகுறித்து வால்பாறை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர்.
கைது
இந்த புகாரின் பேரில் போலீசார் அந்த சிறுவனை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்த சிறுவன் பள்ளிக்கு செல்லாமல் கூலி வேலைக்கு சென்று வருவதும், பள்ளியில் படிக்கும்போது பழக்கம் ஏற்பட்டு அவர்கள் காதலித்து வந்ததும், ேமலும் ஆசை வார்த்தை கூறி அந்த மாணவியை சிறுவன் பாலியல் பலாத்காரம் செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அந்த சிறுவனை கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் அடைத்தனர்.