பெரம்பலூர்
கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிய சிறுவனுக்கு வலைவீச்சு
|கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிய சிறுவனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பெரம்பலூர் புறநகர் பகுதியான துறைமங்கலம் நியூ காலனி வடக்கு தெருவில் ராஜராஜேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சதுர்த்தியையொட்டி நேற்று முன்தினம் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடந்து வருகிறது. இதனால் அந்த கோவில் நேற்று மதியமும் திறந்திருந்தது. அப்போது மதியம் 2 மணி முதல் 3 மணி வரை கோவிலில் ஆட்கள் யாரும் இல்லாத போது கோவிலில் உண்டியல் உடைக்கப்பட்டு, அதில் இருந்த பணம் திருடு போயிருந்தது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் கோவிலுக்கு வந்து அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்து காாட்சிகளை பார்வையிட்டனர். அதில் கோவிலுக்குள் 15 வயதுடைய ஒரு சிறுவன் உள்ளே நுழைந்து உண்டிலைய உடைத்து, அதில் இருந்த பணத்தை திருடி சென்றிருந்தது பதிவாகியிருந்தது. இதையடுத்து விசாரணை நடத்தி அந்த சிறுவனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.