< Back
மாநில செய்திகள்
வீடு புகுந்து திருடிய சிறுவன் கைது
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

வீடு புகுந்து திருடிய சிறுவன் கைது

தினத்தந்தி
|
21 Sept 2023 12:15 AM IST

வாணாபுரம் அருகே பட்டப்பகலில் வீடு புகுந்து திருடிய சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

வாணாபுரம்

வாணாபுரம் அடுத்த அத்தியூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் மனைவி ஷர்மிளா(வயது21). இவர் சம்பவத்தன்று மதியம் அருகில் உள்ள உறவினர் வீ்ட்டுக்கு சென்று விட்டு சிறிது நேரத்துக்கு பின்னர் அங்கிருந்து வீட்டுக்கு வந்தார்.

அப்போது வீட்டில் ஏதோ சத்தம் கேட்டு ஷர்மிளா உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு மர்ம நபர் ஒருவர் பீரோவில் இருந்த ரூ.12 ஆயிரம் ரொக்கம், மோதிரம் உள்ளிட்ட 3 பவுன் நகைகளை திருடிக்கொண்டிருந்தான். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் திருடன், திருடன் கூச்சலிட்டார்.

உடனே அந்த மர்ம நபர் நகை, பணத்துடன் அங்கிருந்து தப்பி ஓடினார். சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் மர்ம நபரை பின்னால் துரத்தி சென்று பிடித்து பகண்டை கூட்டுரோடு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

விசாரணையில் அந்த மர்மநபர் வாணாபுரம் புதூரை சேர்ந்த 14 வயது சிறுவன் என்பதும், வீடு புகுந்து நகை, பணத்தை திருடியதும் தெரியவந்தது.

இதையடுத்து சிறுவனை கைது செய்த போலீசார் அவனிடம் இருந்து திருடிய நகை, பணத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

வீடு புகுந்து திருடிய சிறுவன் தப்பி ஓடியபோது பொதுமக்கள் துரத்தி பிடித்த சம்பவம் அத்தியூர் கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்