விழுப்புரம்
நாட்டு மருந்து சாப்பிட்ட சிறுவன் பலி
|விழுப்புரம் அருகே நாட்டு மருந்து சாப்பிட்ட சிறுவன் பலி போலீசார் தீவிர விசாரணை
விழுப்புரம்
வானூர் தாலுகா தைலாபுரம் பகுதியை சேர்ந்தவன் சக்தி மகன் ரோகித் (வயது 10). இவன் தைலாபுரம் அரசு ஆதிதிராவிடர் நல ஆரம்பப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான். இவனுக்கு மஞ்சள் காமாலை நோய் இருந்ததால் கடந்த 19-ந் தேதி காலை விழுப்புரம் அருகே கெங்கராம்பாளையத்திற்கு வந்து நாட்டு மருந்து சாப்பிட்டுள்ளான். பின்னர் அங்கிருந்து தைலாபுரத்துக்கு சிறுவனை பெற்றோர் அழைத்துச்சென்றனர். அதன் பிறகு அன்று மாலை 3 மணியளவில் ரோகித்துக்கு திடீரென வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. உடனே அவனை பஸ் மூலம் புதுச்சேரி கதிர்காமத்தில் உள்ள அரசு குழந்தைகள் மற்றும் மகப்பேறு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ரோகித் இறந்துவிட்டான்.
இதுகுறித்து சிறுவனின் பெற்றோர், வளவனூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அந்த புகாரில், தங்கள் மகனின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறியிருந்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.