< Back
மாநில செய்திகள்
பாறையில் அடிபட்டு சிறுவன் பலி
திண்டுக்கல்
மாநில செய்திகள்

பாறையில் அடிபட்டு சிறுவன் பலி

தினத்தந்தி
|
9 Jan 2023 12:15 AM IST

வடமதுரை அருகே ஆற்றில் குளித்தபோது பாறையில் அடிபட்டு சிறுவன் பலியானான்.

வடமதுரை அருகே உள்ள பெரியகோட்டை, தெற்கு தெருவை சேர்ந்தவர் ராமுகாளை. இவரது மகன் முனியப்பன் (வயது 17). பால் கறக்கும் வேலை செய்து வந்தான். முனியப்பன், நேற்று மாலை தனது நண்பர்களுடன் அதே பகுதியில் உள்ள சந்தானவர்தினி ஆற்றில் குளிக்கச் சென்றான். அப்போது முனியப்பன் ஆற்றில் குதித்தபோது அங்கிருந்த பாறையில் அடிபட்டு நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தான். இது குறித்து தகவலறிந்த வடமதுரை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த முனியப்பனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்