< Back
மாநில செய்திகள்
திருவள்ளூர்
மாநில செய்திகள்
பொதட்டூர்பேட்டை அருகே தூக்கில் தொங்கிய நிலையில் தொழிலாளி பிணம்
|3 Jun 2022 5:18 PM IST
பொதட்டூர்பேட்டை அருகே தூக்கில் தொங்கிய நிலையில் தொழிலாளி பிணமாக மீட்கப்பட்டார்.
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா கீழ் ஜங்காலபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீதர் (வயது 40). இவரது மனைவி நித்யா (30). கூலித் தொழிலாளியான ஸ்ரீதர் மது குடிக்கும் பழக்கம் உடையவர்.
நித்யா தன்னுடைய தாய் வீட்டுக்கு சென்றிருந்தார். இந்த நிலையில் நேற்று ஸ்ரீதர் வீட்டின் பின்புறம் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். இது குறித்து பொதட்டூர்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சப்-இன்ஸ்பெக்டர் ராக்கி குமாரி அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். இது குறித்து நித்யா பொதட்டூர்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஸ்ரீதரின் தற்கொலைக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.