< Back
மாநில செய்திகள்
கோவளம் அருகே டாக்டரின் பண்ணை வீட்டில் காவலாளி பிணமாக கிடந்தார் - கொள்ளையர்கள் தீர்த்து கட்டினார்களா?
சென்னை
மாநில செய்திகள்

கோவளம் அருகே டாக்டரின் பண்ணை வீட்டில் காவலாளி பிணமாக கிடந்தார் - கொள்ளையர்கள் தீர்த்து கட்டினார்களா?

தினத்தந்தி
|
19 Jun 2022 11:12 AM IST

கோவளம் அருகே சென்னை டாக்டரின் பண்ணை வீட்டில் காவலாளி பிணமாக கிடந்தார். கொள்ளையர்கள் அவரை தீர்த்து கட்டினார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் அருகே செம்மஞ்சேரி குப்பம் பகுதியில் சென்னை கீழ்பாக்கத்தை சேர்ந்த டாக்டர் ராமலிங்கத்துக்கு சொந்தமான பண்ணை வீடு உள்ளது. அவரது பண்னை வீட்டில் தேசிங்கு (வயது 65) என்பவர் 8 ஆண்டுகளுக்கும் மேலாக காவலாளியாக வேலை செய்து வந்தார்.

கடந்த திங்கட்கிழமை அன்று தேசிங்கின் மகன் மேகநாதன் தனது தந்தையை பண்னை வீட்டில் சந்தித்து உணவு கொடுத்து விட்டு வந்ததுள்ளார்.

பின்னர் நேற்று முன்தினம் அவரது மகன் மேகநாதன் அங்கு சென்று பார்த்தபோது தேசிங்கு அழுகிய நிலையில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து மோகநாதன் கேளம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்தபோது தலைப்பகுதியில் சுத்தியலால் அடித்து காயங்களுடன் ரத்தவெள்ளத்தில் இறந்து கிடந்தார்.

அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவ இடத்தில் ரத்தக்கறையுடன் கிடந்த சுத்தியலை போலீசார் கைப்பற்றினர். கொள்ளையடிக்க வந்த கொள்ளையர்கள் யாரேனும் அவரை கொலை செய்தனரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

=========

மேலும் செய்திகள்