< Back
தமிழக செய்திகள்
கேதார்நாத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் பலியான தமிழகத்தை சேர்ந்த 3 பேர் உடல் சென்னை வந்தது
சென்னை
தமிழக செய்திகள்

கேதார்நாத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் பலியான தமிழகத்தை சேர்ந்த 3 பேர் உடல் சென்னை வந்தது

தினத்தந்தி
|
21 Oct 2022 8:59 AM IST

கேதார்நாத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் பலியான தமிழகத்தை சேர்ந்த 3 பேர் உடல் சென்னை வந்தது.

உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத்தில் புனித யாத்திரைக்கு சென்ற போது ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 7 பேர்கள் உயிரிழந்தனர். அதில் சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த பிரேம்குமார் (வயது 63), கலா (50), சுஜாதா (56) ஆகிய 3 பேரும் அடங்குவர். உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த 3 பேரின் உடல்களை சென்னைக்கு விரைந்து கொண்டு வர தமிழ்நாடு அரசு உத்தரகாண்ட் மாநில அரசுடன் இணைந்து செயல்பட்டது.

அதன்படி உத்தரகாண்ட் மாநிலத்தில் இருந்து விமானத்தில் 3 பேர் உடல்களும் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது.

சென்னை விமான நிலையத்தில் 3 பேரின் உடல்களுக்கும் தமிழக வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் உறவினர்களுக்கு ஆறுதல் கூறி உடல்களை ஒப்படைத்தார். பின்னர் விமான நிலையத்தில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் அவர்களது உடல் வீடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டது.

மேலும் செய்திகள்