< Back
மாநில செய்திகள்
வக்பு வாரியத்துக்கு சொந்தமான நிலம் எனக்கூறி பத்திரப்பதிவு செய்ய மறுப்பதை எதிர்த்து பா.ஜ.க. மனு
திருச்சி
மாநில செய்திகள்

வக்பு வாரியத்துக்கு சொந்தமான நிலம் எனக்கூறி பத்திரப்பதிவு செய்ய மறுப்பதை எதிர்த்து பா.ஜ.க. மனு

தினத்தந்தி
|
13 Sept 2022 1:17 AM IST

வக்பு வாரியத்துக்கு சொந்தமான நிலம் எனக்கூறி பத்திரப்பதிவு செய்ய மறுப்பதை எதிர்த்து பா.ஜ.க. மனு அளித்தனர்.

குறை தீர்க்கும் கூட்டம்

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கலெக்டர் பிரதீப்குமார் தலைமை தாங்கினார். இதில் அரசுத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

பாரதீய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் ராஜசேகரன் தலைமையில் நிர்வாகிகள் அளித்த மனுவில், திருச்சியில் சுமார் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை வக்பு வாரியத்துக்கு சொந்தமானது எனவும், அந்த நிலங்கள் மீது எந்த பத்திரப்பதிவும் செய்யக்கூடாது என்றும் அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் மேற்படி சொத்துக்கள் வக்பு வாரியத்துக்கு சொந்தமானது என நிரூபணம் செய்வதற்கான எந்த ஆவணங்களையும் அனுப்பவில்லை.

இதில் பல சொத்துக்களை 100 ஆண்டுகளுக்கும் மேலாக இந்துக்கள் உரிமையாளர்களாக அனுபவித்து வருகிறார்கள். ஆனால் எந்த ஆவணங்களையும் பரிசீலனை செய்யாமல் ஒரு கடிதத்தின் மூலம் பத்திரங்களை பதிவு செய்யாமல் நிறுத்தி வைத்துள்ள நிகழ்வு துரதிஷ்டவசமானது.

வக்பு வாரிய சொத்துக்கள்

ஒரு உத்தரவு சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு அனுப்பப்பட வேண்டும் என்றால் பதிவுத்துறை தலைவருக்கோ, மாவட்ட பதிவாளருக்கோ அல்லது கலெக்டருக்கோ அனுப்பாமல் நேரடியாக சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. எனவே வக்புவாரியம் சார்பில் அனுப்பப்பட்டுள்ள கடிதத்தின் உண்மை தன்மையை ஆராய்ந்து ஆவணங்களை பரிசீலித்து முடிவு எடுக்கும் வரை கடிதத்தின் பேரிலான செயல்முறையை நிறுத்தி வைக்க உத்தரவிட வேண்டும், என்று கூறி உள்ளனர்.

சம்பளம் வழங்க கோரிக்கை

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் எம்ளாயீஸ் யூனியன் (சி.ஐ.டி.யு.) சார்பில் அளிக்கப்பட்ட மனுவில், திருச்சி மாவட்டம் முத்தரசநல்லூரில் அமைந்துள்ள ராமநாதபுரம் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் கடந்த 12 ஆண்டுகளாக மோட்டார் மின் பணியாளர்களாக ஒப்பந்த அடிப்படையில் 19 பேர் பணியாற்றி வருகிறோம். எங்களுக்கு கடந்த ஜூலை, ஆகஸ்டு மாதங்களுக்கான சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால் குடும்பத்தை நடத்த முடியாமல் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகிறோம். ஆகவே எங்களுக்கு சம்பளம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

கான்கிரீட் வீடு

திருச்சி சோமரசம்பேட்டை அம்பேத்கார்நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், ஆதிதிராவிடர் இனத்தை சேர்ந்த எங்களுக்கு கடந்த 1996-ம் ஆண்டு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டது. அங்கு கான்கிரீட் தொகுப்பு வீடு கேட்டு, இதுவரை 12 முறை மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகவே எங்களுக்கு கான்கிரீட் தொகுப்பு வீடு கட்டித்தர வேண்டும் என்று கூறி இருந்தனர்.

திருச்சி வயலூர் முருகன் கோவில் மேற்கூரையை புனரமைப்பு செய்ய வேண்டும் என வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டது.

Related Tags :
மேலும் செய்திகள்