< Back
மாநில செய்திகள்
கலைஞரின் வாழ்க்கை வரலாறு பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் இடம் பெற்றுள்ளது
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

கலைஞரின் வாழ்க்கை வரலாறு பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் இடம் பெற்றுள்ளது

தினத்தந்தி
|
27 Oct 2023 12:15 AM IST

பள்ளி படிப்பை கூட தாண்டாத கலைஞரின் வாழ்க்கை வரலாறு பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் இடம் பெற்றுள்ளது என்று நாகையில் அரசு தலைமை கொறடா கோவி.செழியன் பேசினார்.


பள்ளி படிப்பை கூட தாண்டாத கலைஞரின் வாழ்க்கை வரலாறு பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் இடம் பெற்றுள்ளது என்று நாகையில் அரசு தலைமை கொறடா கோவி.செழியன் பேசினார்.

கலைஞர் நூற்றாண்டு விழா

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சட்டமன்ற நாயகர் கலைஞர் என்ற தலைப்பில் நாகை ஏ.டி.எம். மகளிர் கல்லூரியில் பேச்சுப்போட்டி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு அரசு தலைமை கொறடா கோவி.செழியன் தலைமை தாங்கினார்.

தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:- கலைஞர் முதல்-அமைச்சராக இருந்த போது விதைத்த விதைகள் எல்லாம் இன்று மரமாக வளர்ந்து நிற்கிறது.

பல்கலைக்கழக பாடத்திட்டம்

அதற்காக தான் கலைஞர் நூற்றாண்டு விழாவில் சட்டமன்ற நாயகர் கலைஞர் என்ற தலைப்பில் தமிழ்நாடு முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர்கள் மத்தியில் பேச்சுப்போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகிறது. இதற்காக தமிழ்நாடு சட்டசபை சபாநாயகர் தலைமையில் 12 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இளம் வயது முதல் சமுதாய சிந்தனையுடன் செயல்பட்டவர் கலைஞர். பள்ளி படிப்பை கூட அவர் தாண்டவில்லை. ஆனால் அவர் வாழ்க்கை வரலாறு பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் இடம் பெற்றுள்ளது. ஏழை, எளிய மாணவர்கள் இன்று உயர்கல்வி வரை படிக்கின்றனர் என்றால் அதற்கு கலைஞர் கொண்டு வந்த திட்டங்கள் தான் காரணம்.

இட ஒதுக்கீடு

படிக்கும் மாணவர்கள் பஸ்சில் இலவசமாக பயணம் செய்வது, முதல் பட்டதாரி உதவித்தொகை, பெண்களுக்கு கல்வியில் இட ஒதுக்கீடு மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு என்று சொல்லி கொண்டே போகலாம் என்றார். நிகழ்ச்சியில் தாட்கோ தலைவர் மதிவாணன், நாகை மாலி எம்.எல்.ஏ, தஞ்சை சரக கல்லூரி கல்வி இணை இயக்குனர் தனராஜன், கல்லூரி முதல்வர் அன்புச்செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்