< Back
மாநில செய்திகள்
வீட்டின் கதவை உடைத்த கரடி
நீலகிரி
மாநில செய்திகள்

வீட்டின் கதவை உடைத்த கரடி

தினத்தந்தி
|
18 Oct 2023 3:30 AM IST

கொளப்பள்ளி அருகே வீட்டின் கதவை உடைத்த கரடியால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.

பந்தலூர் தாலுகா கொளப்பள்ளி அருகே பேக்டரி மட்டம் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு அப்பகுதிக்குள் கரடி புகுந்தது. அங்கு சிவனேசன், சேகர் ஆகியோரது வீடுகளின் சமையல் அறை கதவை உடைத்து சமையல் எண்ணெயை குடித்து விட்டு, உணவு பொருட்களை தின்றது. சத்தம் கேட்டு சிவனேசன் சென்று பார்த்த போது, கரடி நிற்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் பொதுமக்கள் ஓடி வந்து கூச்சலிட்டு கரடியை விரட்டினர். தகவல் அறிந்த சேரம்பாடி வனச்சரகர் அய்யனார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். அப்போது பொதுமக்கள் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதேபோல் கொளப்பள்ளி, நெல்லியாளம் டேன்டீ தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் கரடிகள் அட்டகாசம் செய்து வருவதால் பொதுமக்கள், தொழிலாளர்கள் பீதி அடைந்து உள்ளனர்.

மேலும் செய்திகள்