< Back
மாநில செய்திகள்
பலத்த காற்றால் ஆலமரம் வேருடன் சாய்ந்தது
கரூர்
மாநில செய்திகள்

பலத்த காற்றால் ஆலமரம் வேருடன் சாய்ந்தது

தினத்தந்தி
|
3 Sep 2023 7:03 PM GMT

பலத்த காற்றால் ஆலமரம் வேருடன் சாய்ந்து விழுந்தது.

குளித்தலை அருகே உள்ள வைகநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட நத்தமேடு என்று அழைக்கப்படும் பகுதியில் செல்லாயி அம்மன் கோவில் உள்ளது. இங்கு சுமார் 150 ஆண்டுகளுக்கு மேலான ஆலமரம் ஒன்று இருந்தது. இந்த ஆலமரம் நிழலில் பொதுமக்கள்அமர்வது வழக்கம். அதுபோல இங்கு கிராமசபை கூட்டங்களும் நடத்தப்படும். இப்பகுதியில் உள்ள விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளையும் விலை பொருட்களை இப்பகுதியில் வைத்து வாகனங்களில் ஏற்றி செல்வார்கள். பொதுமக்களுக்கு பல்வேறு வகைகளில் பயன் தந்த இந்த ஆலமரம், மயில் உள்ளிட்ட பறவைகளுக்கு புகழிடமாக இருந்தது. இந்தநிலையில் குளித்தலை பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்ததாலும், நேற்று முன்தினம் மாலை வீசிய காற்று காரணமாகவும் பல ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலமரம் வேருடன் அடியோடு சாய்ந்தது. பல்வேறு வகைகளில் பயன் தந்த இந்த மரம் வேரோடு சாய்ந்ததை பொதுமக்கள் பலரும் பார்த்து சென்ற வண்ணம் உள்ளனர். இதேபோல் பலத்த காற்று, மழை காரணமாக சத்தியமங்கலம் அருகே சாலையோரம் இருந்த புளிய மரம் ஒன்றும் நேற்று முன்தினம் வேருடன் சாய்ந்தது. இதையடுத்து இந்த மரத்தை நெடுஞ்சாலை துறையினர் வெட்டி அகற்றி விட்டனர். இந்த 2 மரங்களும் விழுந்தபோது பொதுமக்கள் யாரும் அருகில் இல்லாததால் அசம்பாவிதம் எதுவும் ஏற்படவில்லை.

மேலும் செய்திகள்