< Back
மாநில செய்திகள்
திருவள்ளூர்
மாநில செய்திகள்
தொழில் தொடங்குவதாக கூறி ரூ.9½ லட்சம் கடன் பெற்று ஏமாற்றியதாக வங்கி மேலாளர் போலீசில் புகார்
|13 July 2023 3:57 PM IST
திருவள்ளூர்,
திருவள்ளூர் அடுத்த மணவாள நகர் கபிலர் நகரை சேர்ந்தவர் சரண்யா. இவர் மத்திய அரசு திட்டத்தின் கீழ் சுயதொழில் தொடங்குவதாக கூறி பிரின்டிங் மெஷின் வாங்குவதற்காக திருவள்ளூரில் உள்ள ஒரு வங்கியில் ரூ.9 லட்சத்து 43 ஆயிரம் கடன் பெற்றார். பின்னர் அந்த கடனை வங்கிக்கு செலுத்தாமல், தொழில் தொடங்காமலும் பொய்யான இடத்தை காட்டி வங்கியை ஏமாற்றி பணத்தை மோசடி செய்ததாக கூறப்படுகிறது. அவருக்கு உடந்தையாக வில்சன் என்பவர் திட்டம் போட்டு கூட்டு சதி செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த வங்கியின் மேலாளர் பூமா திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.