< Back
மாநில செய்திகள்
ஜனவரி - 30, 31ம் தேதிகளில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவிப்பு...!
மாநில செய்திகள்

ஜனவரி - 30, 31ம் தேதிகளில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவிப்பு...!

தினத்தந்தி
|
14 Jan 2023 8:42 AM IST

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஜனவரி 30, 31 தேதிகளில் நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவித்துள்ளது.

சென்னை,

வங்கிகளுக்கு வாரத்தில் 5 நாட்கள் வேலை, ஓய்வூதியத்தை உயர்த்துவது, புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது, காலி பணியிடங்களை நிரப்புவது, நிலுவையில் உள்ள பல்வேறு பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண்பது, ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை உடனே தொடங்குவது ஆகிய 6 அம்ச கோரிக்கைகள் தொடர்பாக அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் மும்பையில் இந்திய வங்கிகள் கூட்டமைப்புடன் கடந்த 12-ம் தேதி பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதில் உடன்பாடு ஏற்படாததால் வரும் 30, 31-ம் தேதிகளில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக, அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்