< Back
மாநில செய்திகள்
வளையலால் இளம்பெண் கையை கீறி கொண்டதால் பரபரப்பு
விருதுநகர்
மாநில செய்திகள்

வளையலால் இளம்பெண் கையை கீறி கொண்டதால் பரபரப்பு

தினத்தந்தி
|
16 Oct 2023 1:24 AM IST

வளையலால் இளம்பெண் கையை கீறி கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விருதுநகர் கம்மாபட்டி பகுதியை சேர்ந்த பாண்டிச்செல்வி என்பவர் அப்பகுதியை சேர்ந்த பல பெண்களிடம் மகளிர் சுய உதவிக்குழு மூலம் அவர்கள் பெற்ற கடன் தொகையை பெற்றுக்கொண்டு திருப்பி தராததால் இதுபற்றி பாதிக்கப்பட்ட பெண்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இதனை தொடர்ந்து நேற்று விருதுநகர் கிழக்கு போலீஸ் நிலையத்தில் பாண்டிச்செல்வி விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்தார். அப்போது பாதிக்கப்பட்ட பெண்களும் போலீஸ்நிலையத்தை முற்றுகையிட்டனர். விசாரணையின் போது பாதிக்கப்பட்ட கம்மாபட்டியைச் சேர்ந்த பார்வதி (வயது 25) என்ற பெண் தனது கையை வளையலால் கீறிக் கொண்டதில் காயம் ஏற்பட்டது. இதனால் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து பார்வதி சிகிச்சைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து தனித்தனியாக புகார் மனு கொடுக்குமாறும் அது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் உறுதி அளித்தனர். இதையடுத்து பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்