சேலம்
சரியாக பணம் கட்டாததால் ஏலச்சீட்டு நடத்தியவர் தூக்குப்போட்டு தற்கொலை
|சரியாக பணம் கட்டாததால் ஏலச்சீட்டு நடத்தியவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சேலம்,
தற்கொலை
சேலம் டவுன் ஜலால் புறா பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 64). கடந்த 2 ஆண்டுகளாக ஏலச்சீட்டு நடத்தி வந்தார். ஆனால் அவரிடம் ஏலச்சீட்டில் சேர்ந்தவர்கள் மற்றும் பணம் எடுத்தவர்கள் சரியாக பணம் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஏலச்சீட்டுத்தாரர்களுக்கு பணம் கொடுக்க முடியாமல் அவர் மிகவும் அவதியுற்றார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத போது, கதவை உள்தாழ்பாள் போட்டுவிட்டு ராஜேந்திரன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கிடையில் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பிய அவருடைய மனைவி நீண்ட நேரம் கதவை தட்டியும் திறக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றார். அப்போது ராஜேந்திரன் தூக்கில் பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
போலீசார் விசாரணை
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சேலம் டவுன் போலீசார் விரைந்து சென்றனர். பின்னர் ராஜேந்திரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவருடைய தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.