காஞ்சிபுரம்
மதுவிலக்கு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் ஏலம் நாளை மறுநாள் நடக்கிறது - செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர்
|மதுவிலக்கு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் நாளை மறுநாள் ஏலம் விடப்படும் என்று கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.
வாகனங்கள் ஏலம்
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
செங்கல்பட்டு மாவட்ட போலீஸ்துறை சார்பில் மதுவிலக்கு குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 12 நான்கு சக்கர வாகனங்களும், 3 மூன்று சக்கர வாகனங்களும், 50 இரு சக்கர வாகனங்களும் நாளை மறுநாள் (புதன்கிழமை) காலை 10 மணியளவில் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, சென்னை மண்டல போலீஸ் சூப்பிரண்டு (அமலாக்கம்) ஆகியோர்களின் தலைமையில், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு, தானியங்கி பொறியாளர், காஞ்சீபுரம் மாவட்ட உதவி ஆணையர் (கலால்), மதுவிலக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு, செங்கல்பட்டு மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலர் ஆகியோர் முன்னிலையில் செங்கல்பட்டு அரசு தொழிற்பயிற்சி (ஐ.டி.ஐ.) மைதானத்தில் பொதுமக்கள் முன்னிலையில் பொது ஏலத்தில் விடப்படவுள்ளது.
முன்பணமாக...
பொது ஏலத்தில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் இன்று (திங்கட்கிழமை) முதல் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம். மதுவிலக்கு அமல்பிரிவு. நெ, 20. ஏகாம்பரம் அவென்யூ. குண்டு்ர் கிராமம். செங்கல்பட்டு என்ற இடத்தில் முன் பணமாக ரு.1,000 செலுத்தி பொது ஏலத்தில் கலந்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.