< Back
மாநில செய்திகள்
துணிவு படம் ஓடிய  தியேட்டருக்குள் திடீரென புகுந்த ஆசாமி - பைக், நாற்காலிகளை அடித்து நொறுக்கி அட்டகாசம்
மாநில செய்திகள்

'துணிவு' படம் ஓடிய தியேட்டருக்குள் திடீரென புகுந்த ஆசாமி - பைக், நாற்காலிகளை அடித்து நொறுக்கி அட்டகாசம்

தினத்தந்தி
|
18 Jan 2023 2:23 PM IST

திடீரென திரையரங்குக்குள் நுழைந்து மது போதையில் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி ,

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள தனியார் திரையரங்கில் நேற்று முன்தினம் அஜித்தின் துணிவு படம் ஓடிக்கொண்டிருந்தது.அப்போது திரையரங்கிற்குள் நுழைந்த போதை ஆசாமி, திடீரென அங்கிருந்த வாகனங்களை கீழே தள்ளிவிட துவங்கினார். அப்போது அங்கிருந்த பணியாளர்கள் அவரை தடுத்து நிறுத்தினர். இதில் ஆத்திரம் அடைந்த போதை ஆசாமி திடீரென பணியாளர்களை சரமாரியாக தாக்கத் துவங்கினார். அதன் பின்பு திரையரங்கிற்கு உள்ளே நுழைந்து அங்கிருந்த சேர்களை தரையில் அடித்து உடைத்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் அவரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.விசாரணையில் அவர் சங்கரன்கோவில் லட்சுமியாபுரம் சேர்ந்த கருப்பசாமி என்பது தெரியவந்தது. போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர்.

திடீரென திரையரங்குக்குள் நுழைந்து மது போதையில் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.



Related Tags :
மேலும் செய்திகள்