< Back
மாநில செய்திகள்
ஆறுமுகசாமி ஆணையம் ஓரிரு நாளில் அறிக்கை தாக்கல்.!
மாநில செய்திகள்

ஆறுமுகசாமி ஆணையம் ஓரிரு நாளில் அறிக்கை தாக்கல்.!

தினத்தந்தி
|
21 Aug 2022 3:11 PM IST

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்தும் ஆறுமுகசாமி ஆணையம் ஓரிரு நாளில் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை,

முன்னாள் முதல்-அமைச்சர் மறைந்த ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் பல்வேறு தரப்பினர் இடையே விசாரணை நடத்தியதியது.

இந்நிலையில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் எய்ம்ஸ் மருத்துவக் குழு 3 பக்க அறிக்கையை அளித்துள்ளனர். அதில் டிசம்பர் 5 ம் தேதி உரிய மருத்துவ நடைமுறைகள் அனைத்தும் கடைபிடிக்கப்பட்டு அப்பல்லோ மருத்துவர்கள் மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்கள் உடலை பரிசோதித்து மூளை மற்றும் இதயம் செயலிழந்தது என்பதை உறுதி செய்து டிசம்பர் 5 ம் தேதி 11.30 மணிக்கு ஜெயலலிதா உயிரிழந்ததாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

எனவே மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் எவ்விதமான தவறுகளும் இல்லை என்றும் உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் எய்ம்ஸ் மருத்துவ குழு தெரிவித்துள்ளது.

மேலும் கட்டுப்படுத்த முடியாத அளவிலான நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார் என்றும், பாக்டீரியா ரத்தத்தில் பரவி இருந்தது என்றும், இது போல உயர் ரத்த அழுத்தம் போன்ற பல பிரச்சினைகள் காரணமாக உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஓரிரு நாளில் ஆறுமுகசாமி ஆணையம் தங்களது இறுதி அறிக்கையை அரசிடம் சமர்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்