< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்றுடன் நிறைவு
|22 Aug 2022 9:00 AM IST
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது.
சென்னை,
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் 92 பணியிடங்களுக்கான (துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர், உதவி இயக்குநர்(ஊரக வளர்ச்சித்துறை), டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கான முதல்நிலை எழுத்து தேர்வு நடைபெற உள்ளது.
இந்த நிலையில், இப்பணியிடங்களுக்கு www.tnpsc.gov.in என்ற தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இன்று (22.08.2022) கடைசி நாள் என்றும் பின்னர் அச்சேவை முற்றிலும் நிறுத்தப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 27 முதல் 29ஆம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம் எனவும் அக்டோபர் 30ம் தேதி முதல்நிலைத் தேர்வு நடைபெறும் என்றும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.