< Back
மாநில செய்திகள்
அட்டகாசம் செய்த கரடி கூண்டில் சிக்கியது
நீலகிரி
மாநில செய்திகள்

அட்டகாசம் செய்த கரடி கூண்டில் சிக்கியது

தினத்தந்தி
|
23 Aug 2023 3:15 AM IST

குந்தா அருகே குடியிருப்புக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வந்த கரடி கூண்டில் சிக்கியது. பின்னர் வனத்துறையினர் கரடியை முதுமலை வனப்பகுதியில் விட்டனர்.

ஊட்டி

குந்தா அருகே குடியிருப்புக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வந்த கரடி கூண்டில் சிக்கியது. பின்னர் வனத்துறையினர் கரடியை முதுமலை வனப்பகுதியில் விட்டனர்.

கரடி

நீலகிரி மாவட்டத்தில் 65 சதவீத வனப்பகுதிகள் உள்ளன. ஊட்டி, மஞ்சூர், குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. சமீப நாட்களாக வனப்பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தை, கரடி, காட்டெருமை, யானை உள்ளிட்ட வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளில் உலா வருகின்றன. இந்தநிலையில் குந்தா வனச்சரகத்துக்கு உட்பட்ட அதிகரட்டி பிரிவு, கக்காச்சி, மேல் பாரதி நகர், கீழ் பாரதி நகர், எம்.ஜி.ஆர். நகர், கெந்தளா, மகாராஜா எஸ்டேட் பகுதியில் உள்ள குடியிருப்புக்குள் கடந்த 6 மாதமாக கரடி ஒன்று புகுந்து வந்தது.

அங்கு கதவு, ஜன்னல்களை சேதப்படுத்தி வீட்டுக்குள் இருந்த உணவு பொருட்களை தின்று சேதப்படுத்தியது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். வேலைக்கு சென்று வீடு திரும்ப கடும் சிரமம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து கரடியை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

கூண்டில் சிக்கியது

இதையடுத்து நீலகிரி மாவட்ட வன அலுவலர் கவுதம் அறிவுரை படி, கடந்த 7-ந் தேதி கக்காச்சி பகுதியில் கூண்டு வைக்கப்பட்டது. இந்தநிலையில் நேற்று அந்த கூண்டில் கரடி சிக்கியது. தகவல் அறிந்த வனத்துறையினர் கூண்டோடு கரடியை வாகனத்தில் ஏற்றி, முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு வனச்சரகம் பகுதிக்கு கொண்டு சென்றனர். அங்கு கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார் கரடியை பார்வையிட்டு பரிசோதனை செய்தார். இதில் கரடி நல்ல உடல்நிலையுடன் இருந்தது தெரியவந்தது. பின்னர் தொட்டக்கட்டி பிரிவு, கக்கநல்லா வனப்பகுதியில் கரடி விடப்பட்டது. இதனால் குந்தா பகுதி பொதுமக்கள் நிம்மதி அடைந்து உள்ளனர்.

மேலும் செய்திகள்