< Back
மாநில செய்திகள்
ஒகேனக்கலுக்கு வரும் நீரின் அளவு 57 ஆயிரம் கன அடியாக குறைந்தது
மாநில செய்திகள்

ஒகேனக்கலுக்கு வரும் நீரின் அளவு 57 ஆயிரம் கன அடியாக குறைந்தது

தினத்தந்தி
|
11 Sept 2022 10:55 AM IST

ஒகேனக்கலுக்கு இன்று காலை 6 மணி நிலவரப்படி நீர்வரத்து 57 ஆயிரம் கன அடியாக குறைந்து வந்தது.

பென்னாகரம்,

கர்நாடகா மாநில நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. பாதுகாப்பு கருதி இந்த 2 அணைகளில் இருந்து உபரிநீர் அதிக அளவில் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் ஒகேனக்கலுக்கு நேற்று நீர்வரத்து வினாடிக்கு 65 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது.

இந்த நிலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்ததால் இன்று காலை 6 மணி நிலவரப்படி நீர்வரத்து 57 ஆயிரம் கன அடியாக குறைந்து வந்தது. ஐவர்பாணி, சினிபால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. ஒகேனக்கலில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீடிக்கிறது.

காவிரி கரையோரம் போலீசார், தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் தொடர்ந்து ரோந்து சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தை பிலிகுண்டுலுவில் மத்திய நீர் வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்